வெள்ளி, 5 அக்டோபர், 2012

தேறாத கவிதை ஒன்று


ஏதோ ஓர் உள்ளணர்வு எழுதத் தூண்டுகிறது. அதை எழுதி விடுகிறோம். அதைக் கவிதை என  நினைத்து ஆத்மார்த்தமான நண்பனுக்கு அனுப்பினால், இது கவிதையா எனக் கேள்வியே பதிலாக வருகிறது. இதை இருவருக்கு படித்துக் காட்டினேன் "
Are you ok?" எனப் புலன் விசாரிக்கும் ஒரு பார்வை. ஆனாலும் தோன்றியதை எழுதத் தானே என் வலைத்தளம். பதிவு செய்து வைப்போம். சரி கவிதைக்கு(?) வருவோம்.



எறும்பும் கடவுளும் 

 எங்கிருந்து வந்தது  இந்த எறும்பு 

ஏன்  இத்தனைப் பெரிய கூடத்தில் 
தனியே ஊர்ந்து செல்கிறது.

எதையோ தேடி பயணிக்கிறது.

திசை மாறி தேடியும் 
ஏமாற்றமே

உதவியின்றி சுவரில் முட்டி 
அதைப் பற்றி ஏறுகிறது 

 ஒரு கடவுளின் படத்தில் தஞ்சம் 
முகத்தருகே கடவுளை ஒரு பார்வை 
மெதுவாக இறங்கி கடவுளின் 
பாதத்தில் 

4 கருத்துகள்:

  1. எறும்பைப் பற்றியும் சிந்தித்த வரிகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. நல்லா இருக்குங்க...

    நம்பிக்கையோடு தொடர வாழ்த்துக்கள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  3. தேறாத கவிதை என்று லேபல் ஒட்ட வேண்டாமே?

    ஒரு சிலரை அல்லது பலரைக் கவராமல் போனாலும் ஒவ்வொரு கவிதையும் ஒரு அக அனுபவம். இந்தக் கவிதையை நான் தோற்றுப்போன கவிதையாக நினைக்கவில்லை.

    பதிலளிநீக்கு